PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, February 22, 2011

காகிதத் தமிழன்!








 ஒரு முற்றுப் பெறாத இங்கே கவிதையைப் பார்த்தேன்.....
முடிக்கச் சொல்லி இருந்தார்கள்...
முயற்சி செய்திருக்கிறேன்.....


ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.

மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.

என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.

உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.

வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.

நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்

ஏனெனில்...

நான்
உந்தன் ரத்தத்தில்
நனைத்த பேனாவில்
கடிதம் மட்டுமே
எழுதத் தெரிந்த
காகிதத் தமிழன்!

நடைப்பயிற்சியின் போது
'ஒரு மணி நேர
உண்ணாவிரதம்'  மட்டுமே
இருக்கத்தெரிந்த
உன்னதத் தமிழன்!

மரணங்கள் மன்னிக்கப்படலாம்....
கொலைகள் மன்னிக்கப்படமாட்டாது.....?

4 comments :

  1. கவிதையின் முன் பாதையை, பாதியை, கொடுத்த சில மணி நேரங்களில் , முடிவுடன் கூடிய பதிவு எழுதியமை உங்களின் திறமையைக்காட்டுகிறது.

    ReplyDelete
  2. சமூக சார்ந்து கவிதையை முடித்த விதம் ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. உங்களுக்கு விருது கொடுத்திருக்கோம்..
    நேரமிருப்பின் இந்த பதிவை பார்க்க வாங்க...
    http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_28.html.

    ReplyDelete
  4. விருதுக்கு ரொம்ப நன்றி...பாரத் பாரதி.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......